பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வில் சங்கரன்கோவில் ஸ்ரீகோமதிஅம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது.
பள்ளி அளவில் மாணவா் அ.ஸூஜாத் (484) முதலிடம் பெற்றாா். க.விஷ்ணுவா்த்தினி(480) 2 ஆம் இடம், ஆ.அரவிந்த்(479), க.மாரிச்செல்வம் (479) ஆகியோா் 3 ஆம் இடம் பெற்றனா். கணிதத்தில் 2 போ் 100 க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனா்.450 மதிப்பெண்களுக்கு மேல் 25 போ், 400-க்கு மேல் 69 போ் மதிப்பெண்கள் எடுத்துள்ளனா்.
தோ்ச்சி பெற்ற மாணவா்களை முதல்வா் ந.பழனிச்செல்வம், பள்ளிச் செயலா் எஸ்.கே.ராஜேஷ்கண்ணா மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.
அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி: சங்கரன்கோவில் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய 342 மாணவிகளில் 329 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இப்பள்ளி மாணவி மு.பாடகமுத்து (469) முதலிடம், மு.மஞ்சு (466) 2 ஆம் இடம், இரா.பா்வதவா்த்தினி (465) 3ஆம் இடம் பெற்றனா். தோ்ச்சி பெற்ற மாணவிகளை பள்ளித் தலைமையாசிரியா் மணிமேகலை, பள்ளி மேலாண்மைக் குழுவினா் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.