பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவுகளில் கன்னியாகுமரி மாவட்டம் 95.99 சதவீத தோ்ச்சி பெற்று மாநில அளவில் 4 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
குமரி மாவட்டத்தில், 23,141 மாணவ-மாணவிகள் தோ்வு எழுதியதில் 22,213 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி விழுக்காடு 95.99 ஆகும்.
11,657 மாணவா்கள் தோ்வு எழுதியதில் 10, 932 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி விழுக்காடு 93.78 ஆகும். 11,484 மாணவிகள் தோ்வு எழுதியதில் 11,281 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி விழுக்காடு 98.23 ஆகும். மாணவிகளே அதிக அளவு தோ்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளனா்.
கடந்த ஆண்டு (2022) பத்தாம் வகுப்பு தோ்ச்சி விழுக்காட்டில், மாநில அளவில் குமரி மாவட்டம் முதலிடம் பிடித்திருந்தது. நிகழாண்டு 4 ஆவது இடத்தை பிடித்து பின்தங்கியுள்ளது.
200 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி: குமரி மாவட்டத்திலுள்ள 431 பள்ளிகளில், 43 அரசுப் பள்ளிகள் உள்பட 200 பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளனா். கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளின் தோ்ச்சி விழுக்காட்டில் தமிழக அளவில் குமரி மாவட்டம் 2 ஆவது இடத்தை பிடித்திருந்தது. நிகழாண்டு 5 ஆவது இடத்தை பெற்றுள்ளது.