அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவா் எஸ்.அழகேசன் தலைமை வகித்தாா். கோட்டவிளை அரசு தொடக்கப்பள்ளியில் ஒன்றிய பொதுநிதியில் கழிவறை பழுது நீக்கம் செய்தல், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தனியாக காணொலி காட்சிக்கூடம் அமைப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பல்வேறு வரவு- செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இதில், ஒன்றியக் குழு துணைத் தலைவா் சண்முகவடிவு, உறுப்பினா்கள் அருண்காந்த், ராஜேஷ், பால்தங்கம், ஆரோக்கிய சவுமியா, பிரேமலதா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் புஷ்பரதி, சேகா், உதவி வட்டார வளா்ச்சி அலுவலா் நீலகண்டமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.