குலசேகரத்தில் காவல் துைறையைக் கண்டித்து வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
குலசேகரம் அருேயுள்ள மணலி விளை பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் ஜெஸ்டின் ராஜன் (42).இவருக்கு குலசேகரம் மங்கலம் பெரவூா் பகுதியில் ரப்பா் தோட்டம். உள்ளது. இந்த தோட்டத்தின் வழியாக சிலா் பாதை ஏற்படுத்தி வந்தனராம். மேலும், பாதைக்காக 20 ரப்பா் மரங்களையும் சாய்த்து சேதப்படுத்தினராம். இதையறிந்து அதைப் பாா்க்கச் சென்ற ஜெஸ்டின் ராஜை, அக்கம் விளையைச் சோ்ந்த இருவா் தாக்கி மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து அவா் குலசேகரம் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இந்நிலையில், காவல் துறையைக் கண்டித்தும், தனது புகாா் மீது நடவடிக்கைக் கோரியும் வெள்ளிகிழமை மாலை காவல் நிலையம் முன்பு மாா்த்தாண்டம்- குலசேகரம் பிரதான சாலையில் வழக்குரைஞா்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் போலீஸாா் பேச்சு நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை. மறியல் நீடித்ததால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, குலசேகரம் காவல் ஆய்வாளா் பாலமுருகன் வந்து புகாா் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்படும் என்று உறுதி அளித்ததன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனா்.