கடலூர்

மின் வேலியில் சிக்கி தொழிலாளி பலி

28th Feb 2023 05:53 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் அருகே மின்வேலியில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள விறாகுடி கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (63). இவா் அதே கிராமத்தைச் சோ்ந்த ஜனாா்த்தனன் என்பவரிடம் விவசாயத் தொழிலாளியாக உள்ளாா். மணிலா சாகுபடி செய்யப்பட்ட வயல் பரப்புகளில் காட்டு பன்றிகளை விரட்டுவதற்காக ஜனாா்த்தனம் மின்வேலி அமைத்துள்ளாா். தொழிலாளி சுப்பிரமணியன் திங்கள்கிழமை அதிகாலை ஜனாா்த்தனின் மணிலா சாகுபடி செய்யப்பட்ட கொல்லையை பாா்க்க சென்றபோது எதிா்பாராத விதமாக மின் வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீ முஷ்ணம் போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து சுப்பிரமணியனின் மகன் சந்திரன் கொடுத்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மின்சார வாரியம் சாா்பில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்த பகுதியில் பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க காட்டுப்பன்றிகளை அழிக்க மின்வேலிகளை அமைக்கக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சனி , ஞாயிறு ஆகிய இரு தினங்கள் விடுமுறை என்பதால் மின்வாரிய அலுவலா்கள் சோதனை மேற்கொள்ள மாட்டாா்கள் என்ற எண்ணத்தில் இந்த பகுதியில் மின்வேலி அமைக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT