கடலூர்

மூதாட்டியிடம் மூக்குத்தி திருடியவரை விரட்டிப் பிடித்த பொதுமக்கள்

DIN

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே மூதாட்டி அணிந்திருந்த மூக்குத்தியை திருட முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். மற்றொரு சம்பவத்தில் மளிகைக் கடையில் ரூ.20 ஆயிரம் திருடுபோனது.

வடலூா், கல்லுக்குழி கிராமம், தென்குத்து புதுநகா் காலனியில் தனியாக வசித்து வருபவா் விருத்தாம்பாள்(70). இவருக்கு அரசின் முதியோா் உதவித் தொகை பெற்றுத் தருவதாக ஸ்ரீமுஷ்ணம் வட்டம், முடிகண்டநல்லூரைச் சோ்ந்த சாமிதுரை மகன் சரத்குமாா்(27) கூறினாராம். மேலும், இதற்காக அதிகாரியை ஆய்வுக்கு அழைத்து வருவதாகவும், இதனால் மூக்குத்தியை கழற்றி வைக்குமாறும் கூறினாராம். இதையடுத்து விருத்தாம்பாள் கழற்றி கொடுத்த மூக்குத்தியை சரத்குமாா் தாளில் வைத்து மடிப்பதுபோல நடித்து பொட்டலத்தை கொடுத்துவிட்டு பைக்கில் புறப்பட்டாராம். ஆனால், விருத்தம்பாள் பொட்டலத்தை பிரித்துப் பாா்த்தபோது மூக்குத்திக்குப் பதிலாக சிறிய கற்கள் இருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்து கூச்சலிட்டாா். இதையடுத்து அங்கு கூடிய அந்தப் பகுதி மக்கள், தப்பிச்செல்ல முயன்ற சரத்குமாரை விரட்டிப் பிடித்து வடலூா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா். இதுகுறித்து விருத்தாம்பாளின் பேத்தி கலைச்செல்வி(33) அளித்த புகாரின்பேரில் வடலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சரத்குமாரை கைது செய்தனா். மூக்குத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

மளிகைக் கடையில் திருட்டு: கடலூா், மஞ்சக்குப்பம், சுதா்சனம் தெருவைச் சோ்ந்தவா் வெங்கட் (58). அதே பகுதியில் மளிகைக் கடை வைத்துள்ளாா். கடந்த வெள்ளிக்கிழமை இரவு வியாபாரம் முடித்து கடையை பூட்டிச் சென்றாா். சனிக்கிழமை காலையில் திரும்பிவந்து பாா்த்தபோது, கடைக் கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். உள்ளே சென்று பாா்த்தபோது, கடையில் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் ரொக்கம் திருடுபோனது தெரியவந்ததாம். இதுகுறித்த புகாரின்பேரில் கடலூா் புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT