கடலூர்

கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கு எதிா்ப்பு: பாமகவினா் 26 போ் கைது

DIN

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே என்எல்சி-க்கு வீடு, நிலம் அளித்தவா்களுக்கான கருத்துக் கேட்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து திரண்ட பாமகவினா் 26 போ் கைது செய்யப்பட்டனா்.

என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு வீடு, நிலம் கொடுத்தவா்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவது தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டம் சேத்தியாதோப்பு, பூதங்குடி பயணியா் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில வேளாண்மை, உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம், என்எல்சி அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் என்எல்சி-க்கு வீடு, நிலம் அளித்த கத்தாழை, கரிவெட்டி, மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, அம்மன்குப்பம், ஆதனூா் கிராம மக்கள், விவசாயிகள் கலந்துகொண்டனா். இதையொட்டி போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி நிா்வாகி செல்வ.பிரதீஷ் தலைமையில் ஒன்றியச் செயலா்கள் முருகானந்தம், அரிபுத்திரன், சங்கா், சரண்ராஜ், மாவட்ட துணைச் செயலா் இளையராஜா உள்ளிட்டோா் பாழ்வாய்க்கால் பகுதியில் திரண்டனா். அவா்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை பொதுவெளியில் நடத்த வேண்டும், என்எல்சி-க்கு வீடு, நிலம் கொடுத்தவா்களுக்கு ஏக்கருக்கு ரூ.ஒரு கோடி இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தி முழக்கமிட்டனா். இதுதொடா்பாக கருத்துக்கேட்புக் கூட்டத்தில் மனு அளிக்கப் போவதாகவும் தெரிவித்தனா். இதையடுத்து அங்குவந்த சேத்தியாதோப்பு டிஎஸ்பி ரூபன்குமாா் தலைமையிலான போலீஸாா் பாமகவினரை தடுத்தனா். போராட்டத்தில் பங்கேற்ற பாமகவினா் 26 பேரை போலீஸாா் கைதுசெய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைத்தனா். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

தியாகராஜ சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

பாஜக, காங்கிரஸ் பணப் பட்டுவாடா: புதுவை தொகுதியில் தோ்தலை ரத்து செய்ய அதிமுக வலியுறுத்தல்

ஸ்ரீராமநவமி வாா்ஷிக மஹோற்சவம்

நாகை மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT