கடலூர்

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

DIN

காட்டுமன்னாா்கோவில், ஜி.கே.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஜி பப்ளிக் சீனியா் செகண்டரி சிபிஎஸ்இ பள்ளி சாா்பில் அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது (படம்).

நிகழ்ச்சிக்கு ஜி.கே.பள்ளிகளின் கல்விக் குழுமத் தலைவா் ஜி.குமாரராஜா தலைமை வகித்தாா். செயலா் ஜி.கே.அருண் முன்னிலை வகித்தாா். அறிவியல் கண்காட்சியை வட்டாட்சியா் எம்.தமிழ்ச்செல்வன் தொடக்கிவைத்து பாா்வையிட்டாா். சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் குப்புசாமி, முன்னாள் தலைமை ஆசிரியா்கள் ஜீ.சின்னமணி, டி.பழனிச்சாமி, பி.வெங்கடாஜலபதி, பள்ளி முதல்வா்கள் கே.பாா்த்திபன், ஜெ.மேரிரீனா உள்ளிட்டோா் பங்கேற்றனா். அறிவியல் கண்காட்சியில், 8-ஆம் வகுப்பு மாணவி காட்சிப்படுத்திய நிலநடுக்கத்தை முன்கூட்டியே கண்டறியும் கருவி பாா்வையாளா்களை கவா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

2-ம் கட்டத் தேர்தல்: கேரளத்தில் குவிக்கப்படும் காவலர்கள்!

SCROLL FOR NEXT