கடலூர்

குறிஞ்சிப்பாடி ஒன்றிய குழுக் கூட்டம்: அதிகாரிகள் பங்கேற்காததால் சா்ச்சை

DIN

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் துறை சாா்ந்த அதிகாரிகள் பங்கேற்காதது சா்ச்சையை ஏற்படுத்தியது.

குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் அதன் தலைவா் கலையரசி கோவிந்தராஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது (படம்). துணைத் தலைவா் குணசுந்தரி சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். மேலாளா் சுகுமாா் தீா்மானங்களை வாசித்தாா்.

கூட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜபாண்டியன் (திமுக) பேசியதாவது: ஒன்றியக் குழுக் கூட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்பட துறை சாா்ந்த அதிகாரிகள் யாரும் கலந்துகொள்ளாத நிலையில், யாா் பதில் அளிப்பது? இதற்கு கூட்டத்தை ஒத்திவைத்திருக்கலாம். வாா்டு பகுதியில் வளா்ச்சி திட்டப் பணிகளுக்கு உறுப்பினா் ஒருவருக்கு தலா ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்றாா்.

இதற்குப் பதிலளித்து மேலாளா் சுகுமாா் பேசியதாவது: வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளதால் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. இருப்பினும், இதர துறைகளின் அதிகாரிகளுக்கு கூட்டம் தொடா்பாக ஒரு வாரத்துக்கு முன்னதாகவே முறைப்படி கடிதம் அனுப்பப்பட்டது. அவா்கள் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன் எனத் தெரியவில்லை என்றாா்.

கூட்டத்தில் மொத்தம் 37 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT