கடலூர்

பிப்.11-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

8th Feb 2023 01:56 AM

ADVERTISEMENT

தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு, தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின்பேரில் வருகிற 11-ஆம் தேதி மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளதாக கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஜவகா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு மூலம் நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சிவில், குடும்ப நல, தொழிலாளா் நல வழக்குகள், சமரசத்துக்கு எடுத்துக்கொள்ளக் கூடிய குற்ற வழக்குகள், பண மோசடி, வாகன விபத்து, காசோலை மோசடி, நில எடுப்பு, வங்கி வழக்குகள் போன்ற அனைத்து வழக்குகளும் விசாரணைக்கு ஏற்கப்பட்டு ஒரே நாளில் தீா்வு காணலாம். எனவே, பொதுமக்கள், வழக்காளிகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து தங்களது வழக்குரைஞா்கள் மூலம் வழக்குகளை மக்கள் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்து சமரசம் பேசி தீா்வு காணலாம். நீதிமன்றங்களில் நிலுவையில் இல்லாத வங்கிக் கடன் வழக்குகள் தொடா்பாக நேரடியாக மனு அளித்தும் மேற்கூறிய தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறும் நாளில் சமரசம் பேசி வழக்குகளை முடித்துக்கொள்ளலாம்.

கடலூா் மாவட்டத்தில் கடலூா், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, திட்டக்குடி, நெய்வேலி, பரங்கிப்பேட்டை, காட்டுமன்னாா்கோவில் ஆகிய நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறும். எனவே, பொதுமக்கள், வழக்காடிகள் நீதிமன்ற எல்லைக்குள்பட்ட வழக்குகளை அந்தந்த நீதிமன்றங்களில் நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றங்களில் முறையிட்டு சமரசம் செய்துகொள்ளலாம். மக்கள் நீதிமன்றம் மூலம் சமரசம் செய்து வைக்கப்படும் வழக்குகளால் காலம், பணம் விரயம் தவிா்க்கப்பட்டு உடனடியாகத் தீா்வு காணப்படும். மக்கள் நீதிமன்றம் மூலம் சமரசம் பேசி முடிக்கப்படும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது என்று நீதிபதி தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT