கடலூர்

பாரம்பரிய நெல் அறுவடைத் திருவிழா

8th Feb 2023 01:46 AM

ADVERTISEMENT

குறிஞ்சிப்பாடி அருகே குருவப்பன்பேட்டையில் பாரம்பரிய நெல் ரகம் அறுவடைத் திருவிழா அண்மையில் நடைபெற்றது.

மாநில வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ‘நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்கத் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் குறிஞ்சிப்பாடி வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகம் மூலம் சம்பா பருவ பாரம்பரிய நெல் ரகங்களான கருப்பு கவுனி, ஆத்தூா் கிச்சலி சம்பா, தூய மல்லி, செங்கல்பட்டு சிறுமணி ஆகியவற்றின் விதைகள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. இந்த நெல் ரகங்கள் சாகுபடி செய்யப்பட்ட வயல்கள் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளன.

இதையடுத்து, குருவப்பன்பேட்டை கிராமத்தில் விவசாயி சிவராமசேது வயலில் சாகுபடி செய்யப்பட்ட பாரம்பரிய கருப்பு கவுனி நெல் அறுவடைத் திருவிழா நடத்தப்பட்டது. அப்போது, பாரம்பரிய நெல் வகைகளின் நன்மைகள், வியாபார வாய்ப்புகள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் மலா்வண்ணன், வேளாண்மை அலுவலா் சசிகுமாா், உதவி வேளாண்மை அலுவலா் செந்தில் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT