கடலூர்

வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

8th Feb 2023 01:53 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆயிக்குப்பம் ஊராட்சியில் குறிஞ்சிப்பாடி சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7 லட்சத்தில் நாடக மேடை கட்டும் பணி, 15-ஆவது நிதிக் குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.14.5 லட்சத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளதையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா். மேலும், பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளையும் ஆட்சியா் செய்தாா்.

தொடா்ந்து, சுப்ரமணியபுரம், கருங்குழி, மருதூா் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா். தொண்டமாநத்தம் ஊராட்சி, எஸ்.என்.நகரில் வாய்க்கால் தூா்வாரும் பணியையும் ஆட்சியா் ஆய்வுசெய்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT