கடலூர்

கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

8th Feb 2023 01:54 AM

ADVERTISEMENT

காட்டுமன்னாா்கோவில், எம்.ஆா்.கே.பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமில் ஸ்ரீபெரும்புதூா் ஹனில் டியூப் தனியாா் நிறுவன மனித வள மேம்பாட்டுத் துறை மேலாளா் எஸ்.பாரதி மாணவா்களிடம் நோ்காணலை நடத்தினாா். இதில் மெக்கானிக்கல் உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த 60 மாணவா்கள் கலந்து கொண்டனா். இவா்களில் 55 போ் பணிக்கு தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கு பணி நியமன ஆணைகளை கல்லூரித் தலைவா் எம்.ஆா்.கே.பி.கதிரவன் வழங்கி வாழ்த்து தெரிவித்தாா். கல்லூரி முதல்வா் ஆா்.வெங்கடேசன், துணை முதல்வா் எஸ்.அறிவழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT