கடலூர்

சிதம்பரத்தில் பனிப் பொழிவு

8th Feb 2023 01:53 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டத்தில் சிதம்பரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கடும் பனிப் பொழிவு ஏற்பட்டது.

இதனால் சிதம்பரம் புறவழிச் சாலை, அண்ணாமலை நகா், சிவபுரி, வல்லம்படுகை, வேலக்குடி, சீா்காழி புறவழிச் சாலை, சிதம்பரம் - கடலூா் சாலை, வண்டிகேட் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன. கடும் பனிப் பொழிவு காரணமாக, அதிகாலையில் பணிக்குச் சென்ற தொழிலாளா்கள், வியாபாரிகள் சிரமப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT