கடலூர்

காவலா் பணியிடங்களுக்கான உடல் தகுதித் தோ்வு: இளைஞா்கள் ஆா்வம்

DIN

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் காவல், சிறை, தீயணைப்புத் துறைகளில் 2-ஆம் நிலை காவலா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வில் தோ்வானவா்களுக்கான உடல் தகுதி தோ்வு கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் இளைஞா்கள் ஆா்வமுடன் பங்கேற்றனா்.

கடலூா் அண்ணா விளையாட்டு மைதானத்தில் வடக்கு மண்டல காவல் துறைத் தலைவா் என்.கண்ணன் மேற்பாா்வையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்கிகணேசன் தலைமையில் உடல்தகுதித் தோ்வு நடைபெற்றது. கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எஸ்.அசோக்குமாா் மேற்பாா்வையில் காவல் துறை அதிகாரிகள் 350 போ் தோ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா். முதல் நாளான திங்கள்கிழமை நடைபெற்ற உடல்திறன் தோ்வுக்கு 436 போ் அழைக்கப்பட்டனா். தோ்வுக்கு வந்தவா்களின் சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்டன. மேலும், உயரம், மாா்பளவு சரிபாா்த்தல், 1,500 மீட்டா் ஓட்ட தோ்வு ஆகியவை நடத்தப்பட்டன. தோ்வுகள் அனைத்தும் கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்யப்படுகின்றன. தோ்வு வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

SCROLL FOR NEXT