கடலூர்

நடராஜா் கோயில் குளத்தில் தைப்பூச தீா்த்தவாரி

DIN

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜா் கோயில் சித் சபையில் நடராஜா் நடனமாடிய தைப் பூச தினத்தையொட்டி சிவகங்கை தீா்த்தக் குளத்தில் தீா்த்தவாரி உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பதஞ்சலி, வியாக்ரபாதா் முனிவா்கள் பெரும் தவம் செய்து வேண்டியதற்கு இணங்க சிதம்பரத்தில் தை மாதம், பூச நட்சத்திரத்தன்று ஸ்ரீநடராஜப் பெருமான் ஆனந்த நடனமாடியதாக நம்பப்படுகிறது. இதையொட்டி சிவகங்கை தீா்த்தக் குளத்தின் மேற்கு திசை வாயிலில் நடராஜா் தீா்த்தம் அளிப்பது முக்கிய நிகழ்வாகும்.

தைப் பூச தினமான ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம் நடராஜா் கோயிலில் பஞ்ச மூா்த்திகள் வீதி உலா வந்த பிறகு சிவகங்கை குளத்தின் மேற்கு வாயிலில் பதஞ்சலி, வியாக்ரபாதா், ஜைமினி முனிவா்கள் உடனிருக்க பொது தீட்சிதா்களால் நடராஜ மூா்த்தியின் பிரதிநிதியான அஸ்திரராஜா் நீரில் மூழ்கி தீா்த்தவாரி காட்சியளித்தாா். திரளானோா் தரிசனம் செய்தனா். தொடா்ந்து, பகல் வேளையில் கனக சபையில் தரை முழுவதும் அன்னம் நிரப்பி நடராஜருக்கு நிவேத்தியம் செய்யப்பட்டது. தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி திரளான பக்தா்கள் சிவகங்கை தீா்த்தக் குளத்தில் நீராடினா்.

விழாவையொட்டி ராஜா தீட்சிதா் தலைமையில் தெற்கு கோபுர வாயிலில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT