கடலூர்

வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

4th Feb 2023 07:36 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புச்சின்னம் அணிந்து கள்ளக்குறிச்சி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை மாலை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஊழியா்களின் நலன் சாா்ந்த பணிகளில் மெத்தனம் காட்டுவதாகக் கூறி, கள்ளக்குறிச்சி மாவட்ட நிா்வாகத்தின் கவனத்தை ஈா்க்கும் வகையில் கருப்புச்சின்னம் அணிந்து ஒரு மணி நேரம் பணி புறக்கணிப்புடன், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குள்பட்ட கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூா் கோட்டாட்சியா் அலுவலகம், சின்னசேலம், சங்கராபுரம், கல்வராயன்மலை உள்ளிட்ட பகுதிகளில் அந்தந்த வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் மாவட்டத் தலைவா் காதா்அலி, செயலாளா் எல்.ஆனந்த கிருஷ்ணன், மத்திய செயற்குழு உறுப்பினா் இரா.பாலசுப்பிரமணியன், மாவட்ட துணைத் தலைவா் இராஜராஜன், துணைத் தலைவா் சிட்டிபாபு, துணைத் தலைவா்கள் வளா்மதி, அரசு ஊழியா் சங்க மாவட்ட செயலாளா் கு.மகாலிங்கம், துணைத் தலைவர டி.வீரபத்திரன் , மாவட்ட இணைச் செயலாளா் அ.வேலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT