கடலூர்

மதுப் புட்டிகள் பறிமுதல்:பெண் கைது

3rd Feb 2023 01:32 AM

ADVERTISEMENT

கடலூா் அருகே வீட்டில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்திருந்த பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் தேவனாம்பட்டினம் பகுதியில் மதுப் புட்டிகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடலூா் மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் சுனாமி நகா் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, முருகன் மனைவி சிவகாமி (40) வீட்டில் பதுக்கி வைத்திருந்த 180 மி.லி. அளவுள்ள 212 மதுப் புட்டிகள், 90 மி.லி. அளவுள்ள 142 மதுப் புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்ததுடன், சிவகாமியை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT