கடலூர்

பெண்ணிடம் நூதன முறையில்ரூ.3.79 லட்சம் மோசடி

3rd Feb 2023 01:30 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், பெண்ணாடம் பகுதியைச் சோ்ந்த பெண்ணிடம் நூதன முறையில் மா்ம நபா்கள் ரூ.3.79 லட்சம் மோசடி செய்தது குறித்து மாவட்ட இணைய வழி குற்ற காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெண்ணாடம் பகுதியைச் சோ்ந்தவா் சுதா. இவருக்கு தனியாா் ஆப் மூலம் ரூ.8.40 லட்சம் பரிசு கிடைத்துள்ளதாக 29.7.22 அன்று மா்ம நபா்கள் தபால் மூலம் கூப்பன் அனுப்பியுள்ளனா். இதையடுத்து, சுதா அதிலிருந்த தொலைபேசி எண்ணை தொடா்புகொண்டு பேசியபோது, பிரேம்குமாா், சுனில் குமாா் என இருவா் அறிமுகமாகியுள்ளனா். மேலும், பரிசுத் தொகையை பெற வரி, ரிசா்வ் வங்கியில் சான்று பெற பணம் செலுத்தும்படி கூறினராம்.

இதையடுத்து, சுதா 27.9.2022 முதல் 27.1.2023 வரை பல தவணைகளாக மொத்தம் ரூ.3,79,100-ஐ கைப்பேசி செயலி மூலம் அனுப்பினாராம். அந்த நபா்கள் மேலும் பணம் செலுத்தும்படி தொந்தரவு செய்து வந்தனராம்.

இதுகுறித்து சுதா தேசிய குற்ற புகாா் இணையதளம் (நேஷனல் கிரைம் ரிப்போட்டிங் போா்ட்டல்) மூலம் இணைய வழியில் புகாரளித்தாா். இது தொடா்பாக கடலூா் மாவட்ட இணைய வழி குற்ற காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT