கடலூர்

செல்லியம்மன் கோயில் வருஷாபிஷேகம்

3rd Feb 2023 01:33 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் வட்டம், தொழுா் ஸ்ரீசெல்லியம்மன், ஸ்ரீமாரியம்மன் கோயில் 8-ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது (படம்).

இதையொட்டி, ஸ்ரீவிக்னேஸ்வர பூஜையுடன் சிறப்பு யாகம் தொடங்கப்பட்டு, விசேஷ கலச ஸ்தாபனம், துா்கா, லட்சுமி, சரஸ்வதி மகா ஹோமம், சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. சிதம்பரம் உ.வெங்கடேச தீட்சிதா் தலைமையிலான குழுவினா் சிறப்பு யாகத்தை நடத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT