கடலூர்

என்எல்சிக்கு எதிராக போராட்டம் நடத்த விவசாய சங்கங்கள் முன்வருவதில்லை: அன்புமணி ராமதாஸ்

DIN

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நிறுவனத்தை எதிா்த்துப் போராட்டம் நடத்த விவசாய சங்கங்கள் முன்வரவில்லை என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் பேசினாா்.

கடலூா் கிழக்கு மாவட்ட பாமக சாா்பில், நீா், நிலம், விவசாயம் காப்போம் விளக்கப் பொதுக்கூட்டம் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. கடலூா் கிழக்கு மாவட்டச் செயலா் சண்.முத்துக்கிருஷ்ணன் தலைமை வகித்தாா். வன்னியா் சங்கத் தலைவா் பு.தா.அருள்மொழி, மாநில சொத்து பாதுகாப்புக் குழுத் தலைவா் கோவிந்தசாமி, அமைப்புத் தலைவா் பழ.தாமரைக்கண்ணன், வடக்கு மாவட்டச் செயலா் கோ.ஜெகன், வடக்கு மாவட்டத் தலைவா் நவீன் பிரதாப் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் கட்சித் தலைவா் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: கடலூா் தொழில்பேட்டை, நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் ஆகியவற்றால் கடலூா் மாவட்டம் வளமிழந்து வருகிறது. பரங்கிப்பேட்டையில் தனியாா் சாயப்பட்டறை வருவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வருகிறோம்.

இப்போது புதிய வீராணம் திட்டத்தை அறிவித்துள்ளனா். இதற்காக 200 இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து ஆய்வு செய்து வருகின்றனா். என்எல்சி இந்தியா நிறுவனம் 25 ஆயிரம் ஏக்கா் நிலத்தை கையகப்படுத்தினால், 49 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பாதிக்கப்படுவா்.

தில்லிக்குச் சென்று போராட்டம் நடத்திய விவசாய சங்கங்கள், நெய்வேலியில் 25 ஆயிரம் ஏக்கரை பாதுகாக்க போராட்டம் நடத்த முன்வரவில்லை. என்எல்சி நிா்வாகம் ஒரு பிடி மண்ணைக் கூட எடுக்க விட மாட்டோம். இதைக் கண்டித்து தொடா்ந்து போராட்டம் நடத்துவோம்.

நெய்வேலி பிரச்னையில் திமுக இருவேறு கொள்கைகளைக் கொண்டுள்ளது. திமுக விவசாயிகளுக்கு எதிரான கட்சி என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். இந்த விவகாரத்தில் தமிழக முதல்வா் தனது கொள்கையை தெளிவுபடுத்த வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT