கடலூர்

மத்திய நிதிநிலை அறிக்கை:விவசாய சங்கத் தலைவா் கருத்து

2nd Feb 2023 01:32 AM

ADVERTISEMENT

மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படுமா? என்ற சந்தேகம் விவசாயிகள் மத்தியில் மேலோங்கி இருப்பதாக காவிரி விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு சங்க பொதுச் செயலா் பெ.ரவீந்திரன் புதன்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

2024 மக்களவைத் தோ்தலை மனதில் கொண்டு அறிவிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையாக உள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக விவசாயிகள் விரோத போக்கை கடைப்பிடித்த மத்திய அரசு, நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ள திட்டங்களை முழுமையாக செயல்படுத்தும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT