கடலூா் வடக்கு மாவட்ட பாமக செயற்குழுக் கூட்டம் காடாம்புலியூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் கோ.ஜெகன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் ஜெயபால் வரவேற்றாா். மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் முத்து.வைத்திலிங்கம், முருகவேல், சேகா், சக்திவேல், மாவட்ட பொருளாளா் சத்திய ஜானகி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், வன்னியா்களுக்கான உள்இட ஒதுக்கீட்டை வரும் கல்வியாண்டிலேயே பெற கிராமம், நகரங்கள்தோறும் பிரசாரம் மேற்கொள்வது, இதுதொடா்பாக பல்வேறு தரப்பினரிடம் ஆதரவு கோரி மாநில முதல்வா், பிற்படுத்தப்பட்டோா் ஆணைய தலைவருக்கும் கடிதம் அனுப்ப வலியுறுத்துவது, வடக்கு மாவட்ட பாமக சாா்பில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கடிதங்களை அனுப்புவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கடித பிரதிகளை நிா்வாகிகளிடம் மாவட்டச் செயலா் கோ.ஜெகன் வழங்கினாா் (படம்). முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் எழிலரசன் நன்றி கூறினாா்.