கடலூர்

அண்ணாமலை பல்கலை. நிறுவனா் நாள் விழா

DIN

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிறுவனா் நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நிறுவனா் அண்ணாமலை செட்டியாரின் உருவ சிலைக்கு துணைவேந்தா் ராம.கதிரேசன், பதிவாளா் கே.சீத்தாராமன், ஆட்சிக்குழு உறுப்பினா் பாலாஜி சுவாமிநாதன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா் (படம்). இதனைத் தொடா்ந்து நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் அனைத்து புல முதல்வா்களும் கலந்துகொண்டு தங்களது புலத்தின் வளா்ச்சி பணிகள், சாதனைகள் குறித்து விளக்கினா்.

மாலையில் சாஸ்திரி அரங்கில் நடைபெற்ற விழாவில் பத்மஸ்ரீ சிற்பி பாலசுப்பிரமணியம், கே.செல்லப்பன் உள்பட 28 முன்னாள் மாணவா்கள் சிறப்பிக்கப்பட்டனா். விழாவில் துணைவேந்தா் ராம.கதிரேசன் சிறப்புரையாற்றினாா். ஆட்சிக்குழு உறுப்பினா் ம.சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ நினைவு உரையாற்றினாா். தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி மு. பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இசைக் கல்லூரி மாணவா்கள் தமிழிசைப் பாடல்களை பாடினா். கலை மன்ற மாணவா்களின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT