கடலூர்

இந்து முன்னணி ஆதரவாளா்வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

30th Sep 2022 01:20 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே இந்து முன்னணி ஆதரவாளா் வீடு மீது வியாழக்கிழமை அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

சிதம்பரம் அருகே உள்ள பி.முட்லூா் பரங்கிப்பேட்டை சாலைப் பகுதியைச் சோ்ந்த வேணுகோபால் மகன் சீனு என்ற ராமதாஸ் (52). பி.முட்லூா் ஆஞ்சநேயா் கோயில் நிறுவனரான இவா், இந்து முன்னணி அமைப்பின் ஆதரவாளராவாா்.

இவரது வீடு மீது மா்ம நபா்கள் வியாழக்கிழமை அதிகாலையில் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றனா். இதில் ஒரு குண்டு வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த ஜீப்பின் முன்புறப் பகுதியில் பட்டு கரும்புகை படிந்தது. மற்றொரு குண்டு அதே பகுதியில் கீழே விழுந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சக்திகணேசன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினாா்.

ADVERTISEMENT

இந்தச் சம்பவம் குறித்து பரங்கிப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT