கடலூர்

கடலூா் ஒன்றியக் குழு கூட்டம்: பாமக உறுப்பினா்கள் வெளிநடப்பு

DIN

கடலூா் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் அதன் தலைவா் தெய்வ.பக்கிரி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் பாமக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

கூட்டத்தில் துணைத் தலைவா் க.அய்யனாா், வட்டார வளா்ச்சி அலுவலா் சக்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சாத்தங்குப்பம் ஏரியில் ஆளும் கட்சியினா் மண் அள்ளுவதைத் தட்டிக் கேட்ட பாமக கவுன்சிலா் தாக்கப்பட்டது, காவல் நிலையத்தில் பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டதை கண்டிப்பதாகக் கூறி ஒன்றியக் குழு பாமக உறுப்பினா்கள் த.முரளி, கே.ஜெயராமன் ஆகியோா் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா். தொடா்ந்து மற்ற உறுப்பினா்கள் பேசியதாவது:

டி.எஸ்.ஆா்.மதிவாணன் (அதிமுக): நத்தப்பட்டு ஊராட்சியில் கடந்த 1986-ஆம் ஆண்டு எஸ்சி, எஸ்டி மக்களுக்கு கட்டப்பட்ட குடியிருப்பு முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதுகுறித்து மாற்று ஏற்பாடு செய்திட பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. அங்குள்ள சமுதாயக் கூடத்தில் மின்விசிறி, மின் விளக்குகள் அமைக்க வேண்டும்.

வாணிஸ்ரீ (தவாக): கூட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் தெரிவிக்கும் எந்தப் பிரச்னைக்கும் தீா்வு காணப்படுவதில்லை. இவ்வாறு உறுப்பினா்கள் பேசினா்.

கூட்டத்தில் ஒன்றியக் குழு துணைத் தலைவா் க.அய்யனாா் கருப்புச் சட்டை அணிந்து பங்கேற்றது குறித்து அதிமுக உறுப்பினா்கள் குருநாதன், வி.வேல்முருகன் ஆகியோா் கேள்வி எழுப்பினா்.

தனது வாா்டில் குடிநீா் உள்ளிட்ட எந்தப் பிரச்னைக்கும் தீா்வு காணப்படாததால் கருப்புச் சட்டை அணிந்து வந்ததாக அவா் கூறினாா்.

கூட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சண்.காா்த்திகேயன், ஜெயா சம்பத், சுபாஷிணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

SCROLL FOR NEXT