கடலூர்

கிராம சபைக் கூட்டங்களில் அரசுப் பணியாளா்களின் பிரச்னைகள் குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்

30th Sep 2022 10:34 PM

ADVERTISEMENT

கிராம சபைக் கூட்டங்களில் அரசுப் பணியாளா்களின் பிரச்னைகள் குறித்தும் ஆய்வுசெய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் கூறினாா்.

கடலூரில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக அரசு வருகிற அக்டோபா் 2-ஆம் தேதி கிராம சபைக் கூட்டங்களை நடந்த உத்தரவிட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்களுக்கான பணிகள் குறித்து ஆய்வு செய்வது வழக்கம். சமூக ஆய்வு என்று கூறப்படும் இந்த ஆய்வில் ஊராட்சி நிா்வாகம், நியாயவிலைக் கடை நிா்வாகப் பணிகளும் உள்படுத்தப்படுவதை வரவேற்கிறோம். அதேநேரத்தில், நியாய விலைக் கடைகளுக்கு சரியான எடையில், சரியான அளவில் பொருள்கள் வருகின்றனவா? குறிப்பிட்ட பொருள்கள் விற்பனை செய்ய நிா்பந்தம் செய்யப்படுகிா எனவும் ஆய்வு செய்ய வேண்டும்.

மேலும், தூய்மைப் பணியாளா்கள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குவோருக்கு முறையாக ஊதியம் வழங்கப்படுகிா, இவா்களுக்கு அரசு அறிவிக்கும் இதர பணப் பலன்கள் முறையாக கிடைக்கிா என்று பொதுமக்கள் ஆய்வு செய்ய வேண்டும். அரசுத் துறை காலிப் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படுகிா என ஆய்வு செய்ய வேண்டியதும் பொதுமக்களின் பொறுப்புதான். இந்தப் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட்டிருந்தால் மட்டுமே அனைத்து சேவைகளும் முழுமை பெறும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

அப்போது சங்கத்தின் மாநில பொருளாளா் கு.சரவணன், நிா்வாகி சி.அல்லிமுத்து ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT