கடலூர்

இளைஞா் தற்கொலை

30th Sep 2022 01:19 AM

ADVERTISEMENT

திட்டக்குடி அருகே இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே கீழ்ச்செருவாய் வெள்ளாற்றில் தடுப்பணை அருகே மரத்தில் அடையாளம் தெரியாத இளைஞா் தூக்கிட்ட நிலையில் வியாழக்கிழமை சடலமாக கிடந்தாா். இதுகுறித்து தகவலறிந்த திட்டக்குடி போலீஸாா் உடலைக் கைப்பற்றினா்.

விசாரணையில், இறந்தவா் பெரம்பலூா் மாவட்டம், அகரம் சீகூா் கிராமத்தைச் சோ்ந்த ராமராஜ் மகன் பாலாஜி (34) எனத் தெரியவந்தது. திருமணம் ஆகாத இவா் திரைப்பட இயக்குநா் ஆவதற்கு பல ஆண்டுகளாக முயற்சி செய்து வந்தாராம். ஆனால், அவருக்கு உரிய வாய்ப்பு கிடைக்காத நிலையில் தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT