கடலூர்

ஆற்றில் மூழ்கியவா் மாயம்

30th Sep 2022 01:20 AM

ADVERTISEMENT

காட்டுமன்னாா்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கியவரை தீயணைப்பு வீரா்கள் தேடி வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள எய்யலூா், மேல்பாதி கிராமத்தைச் சோ்ந்த அம்பலவாணன் மகன் சங்கரன் ( 45) (படம்). இவா் வியாழக்கிழமை கொள்ளிடம் ஆற்றில் வீச்சு வலையை பயன்படுத்தி மீன்பிடித்துக்கொண்டிருந்தாா். அப்போது திடீரென ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாா்.

இதுகுறித்த தகவலின்பேரில் காட்டுமன்னாா்கோவில் தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து பைபா் படகு மூலம் ஆற்றில் சங்கரனை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். சங்கரனுக்கு திருமணமாகி மகன், மகள் உள்ளனா். இவரது மனைவி ஏற்கெனவே இறந்துவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT