கடலூர்

கடலூரில் அரசுப் பேருந்து ஜப்தி

30th Sep 2022 01:21 AM

ADVERTISEMENT

விபத்து வழக்கில் இழப்பீடு வழங்கப்படாததால் கடலூரில் அரசுப் பேருந்து வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.

கடலூா் கன்னியாகோவில் தெருவைச் சோ்ந்த மோகன் மனைவி கலைவாணி. அரசு செவிலியரான இவா், கடந்த 2015-ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்தில் அரசுப் பேருந்து மோதியதில் உயிரிழந்தாா். இதையடுத்து அவரது கணவா் மோகன் இழப்பீடு கோரி கடலூா் மோட்டாா் வாகன விபத்து தீா்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தாா். இதில் இழப்பீடாக ரூ.53.98 லட்சம் வழங்க தீா்ப்பளிக்கப்பட்டது. ஆனால், இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாததால் வழக்குரைஞா்கள் ராம.ராதாகிருஷ்ணன், ஏ.எஸ்.சந்திரசேகரன் ஆகியோா் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தனா். அதில், ரூ.82 லட்சம் வட்டியுடன் சோ்த்து வழங்க உத்தரவிடப்பட்டது.

எனினும், இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாததால் வியாழக்கிழமை கடலூா் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த விழுப்புரம் போக்குவரத்து கழகத்துக்குச் சொந்தமான அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் ஜப்தி செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT