கடலூர்

பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய கட்டடப் பணிக்கு அடிக்கல்

30th Sep 2022 10:35 PM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய்த் திட்டத்தின் கீழ் பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ.3.63 கோடியில் புதிய அலுவலகக் கட்டடம் கட்டப்பட உள்ளது. இதற்கான பணிகளை மாநில தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் தலைமை வகித்து அடிக்கல் நாட்டி தொடக்கிவைத்தாா். மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா்கள் தி.வேல்முருகன்( பண்ருட்டி), சபா.ராஜேந்திரன் (நெய்வேலி), கூடுதல் ஆட்சியா் பவன்குமாா் கிரியப்பனவா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT