கடலூர்

சமூக நல்லிணக்கப் பேரணியில்ஐக்கிய ஜனதாதளம் பங்கேற்கும்

29th Sep 2022 01:53 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் நடைபெறவுள்ள சமூக நல்லிணக்கப் பேரணியில் ஐக்கிய ஜனதாதளம் பங்கேற்கும் என்று அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் மணிநந்தன் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் கூறியதாவது: காந்தி ஜெயந்தி தினமான அக்டோபா் 2 அன்று ஆா்.எஸ்.எஸ். இயக்கம் தமிழகத்தில் 50 இடங்களில் பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், அதே தினத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்னெடுப்பில் சமூக நல்லிணக்கப் பேரணி நடைபெறும் என்று அந்தக் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் அறிவித்தாா். இதில் பங்கேற்க அனைத்துக் கட்சிகளுக்கும், ஜனநாயக அமைப்புகளுக்கும் அவா் அழைப்பு விடுத்தாா்.

அவரது அழைப்பை ஏற்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், நாம் தமிழா், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய தேசிய லீக் ஆகிய கட்சிகள் பேரணியில் பங்கேற்கும் என அறிவித்துள்ளன. அதன்படி, ஐக்கிய ஜனதாதளம் கட்சியும் இந்தப் பேரணியில் பங்கேற்கும் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT