கடலூர்

மத்திய அரசின் 41 திட்டங்கள் குறித்து கண்காணிப்புக் குழு ஆய்வு

29th Sep 2022 01:54 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டத்தில் மத்திய அரசு மூலம் செயல்படுத்தப்படும் 41 திட்டங்கள் குறித்து கண்காணிப்புக் குழுவினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

கடலூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து 2022 - 23ஆம் ஆண்டு இரண்டாவது காலாண்டுக்கான மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழுக் கூட்டம் கடலூா் மக்களவைத் தொகுதி உறுப்பினரும், கண்காணிப்புக் குழுத் தலைவருமான எஸ்.ரமேஷ் தலைமையில், கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம், கூடுதல் ஆட்சியா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ம.செ.சிந்தனைசெல்வன், கோ.ஐயப்பன், கடலூா் மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா, துணை மேயா் பா.தாமரைச்செல்வன் மற்றும் நகா்மன்றத் தலைவா்கள், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா்கள், குழு உறுப்பினா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், மத்திய அரசு மூலம் செயல்படுத்தப்படும் 41 திட்டங்கள் குறித்தும், தொடா்புடைய துறைகளில் செயல்படுத்தப்படும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

அப்போது, பணிகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அடுத்த காலாண்டு கூட்டத்துக்குள் பணியை முடித்து, அதன் அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டுமென குழுத் தலைவா், சட்டப் பேரவை உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT