கடலூர்

கடலூா் மாவட்டத்தில் 13,899 மெ. டன் உரங்கள் இருப்பு

29th Sep 2022 01:55 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டத்தில் 13,899 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேளாண் இணை இயக்குநா் சு.ரவிச்சந்திரன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

நடப்பு பருவத்தில் நெல் 22,924 ஹெக்டோ், மக்காச்சோளம் 18,936 ஹெக்டோ், பருத்தி 2,156 ஹெக்டோ், கரும்பு 15,399 ஹெக்டோ் என மொத்தம் 59,415 ஹெக்டோ் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தற்போது கடலூா் மாவட்டத்தில் யூரியா - 4,576.7 மெ.டன், டி.ஏ.பி - 2,160.3 மெ.டன், பொட்டாஷ் - 1,514.9 மெ.டன், காம்ப்ளக்ஸ் - 5,647.4 மெ.டன் உரங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியாா் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

கடந்த வாரம் மாவட்டத்துக்கு 2775.5 மெ.டன் யூரியா ரயில் மூலம் பெறப்பட்டு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் 1396.8 மெ.டன், தனியாா் உரக்கடைகளில் 1378.7 மெ.டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

நிகழாண்டு கடலூா் மாவட்டத்துக்கு இதுநாள் வரை 26,569.5 மெ.டன் யூரியா, 6,801 மெ.டன் டி.ஏ.பி, 4,121 மெ.டன் பொட்டாஷ், 17,540 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் பெறப்பட்டு, 22,558 மெ.டன் யூரியா, 6,480 மெ.டன் டி.ஏ.பி., 4,097 மெ.டன் பொட்டாஷ், 18,308 மெ.டன் காம்ப்ளக்ஸ், 1,735 மெ.டன் சூப்பா் உரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

உர விற்பனையாளா்கள் அனைவரும் உரங்கள் இருப்பை முறையாகப் பராமரித்து, அதிகபட்ச சில்லறை விலைக்கு மிகாமல் விற்பனை செய்ய வேண்டும். யூரியா மற்றும் பிற உரங்களுடன் வேறு எந்தப் பொருளையும் இணைத்து விவசாயிகள் விருப்பமின்றி விற்பனை செய்யக் கூடாது. உர பதுக்கல் தொடா்பாக ஏதேனும் புகாா்கள் வரப்பெற்றால், உர விற்பனை நிலையங்கள் மீது உரக் கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT