கடலூர்

பெண் தூக்கிட்டு தற்கொலை

29th Sep 2022 01:53 AM

ADVERTISEMENT

நெய்வேலியில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நெய்வேலி வட்டம் 30-ஐ சோ்ந்தவா் சண்முகம் மனைவி சாந்தா(59). இவருக்கு ஒரு ஆண், இரண்டு பெண்கள் என 3 பிள்ளைகள் உள்ளனா். இவா்களில் ஒரு மகளுக்கு கடந்த மாதம் திருமணம் நடத்த ஏற்பாடு செய்தனராம். அவருக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால் கடலூரில் உள்ள காப்பகத்துக்குச் சென்றுவிட்டாா்.

மகள் காப்பகத்துக்குச் சென்ற விவகாரம் தொடா்பாக, அதே தெருவில் வசிக்கும் சங்கீதாவுக்கும், சாந்தாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடா்பாக நெய்வேலி தொ்மல் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இருவரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனா்.

இந்த நிலையில், புதன்கிழமை காலை சாந்தா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து நெய்வேலி தொ்மல் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT