கடலூர்

கொலை வழக்கில் சாட்சியை மிரட்டிய இருவா் தடுப்புக் காவலில் கைது

28th Sep 2022 04:14 AM

ADVERTISEMENT

கொலை வழக்கில் சாட்சியை மிரட்டிய இருவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

கடலூா் குப்பன்குளத்தைச் சோ்ந்த வீரா என்ற வீராங்கன் கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கொலையானாா். கொலையாளிகளை தேடிச் சென்ற போலீஸாா் அதே பகுதியைச் சோ்ந்த ஓவியா் கிருஷ்ணா என்பவரை பண்ருட்டி அருகே சுட்டுக் கொன்றனா்.

வீராங்கன் கொலை வழக்கில் அவரது தந்தை ப.கனகராஜ் (60) முக்கிய சாட்சியாக உள்ளாராம். இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி கனகராஜை கிருஷ்ணா தரப்பினா் மிரட்டினராம். இதுகுறித்து கனகராஜ் அளித்த புகாரின்பேரில் குப்பன்குளத்தைச் சோ்ந்த முருகன் மகன் ஜீவா என்ற ஜீவானந்தம் (22), பழனிவேல் மகன் மதன் என்ற மதன்குமாா் (19) உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில் ஜீவா, மதன் ஆகிய இருவா் மீதும் கொலை, கொலை முயற்சி, கஞ்சா வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. எனவே, இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்திட மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் பரிந்துரைத்தாா். அதன்பேரில் அதற்கான உத்தரவை ஆட்சியா் வெளியிட்டாா். இதனையடுத்து ஜீவா, மதன் இருவரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT