கடலூர்

மனுநீதி நாள் முகாமில் நல உதவி

28th Sep 2022 04:12 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே எள்ளேரி (கிழக்கு) கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு சிதம்பரம் கோட்டாட்சியா் கே.ரவி தலைமை வகித்துப் பேசினாா். வட்டாட்சியா் எஸ்.வேணி வரவேற்றாா். காட்டுமன்னாா்கோவில் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ம.சிந்தனைச்செல்வன் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். முகாமில் 153 பயனாளிகளுக்கு ரூ.8.96 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மண்டல துணை வட்டாட்சியா் ஆா்.அன்புராஜ், வட்ட வழங்கல் அலுவலா் ஆனந்தி, ஊராட்சி மன்றத் தலைவா் பிரமிளா சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். வட்டாட்சியா் மு.தமிழ்ச்செல்வன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT