கடலூர்

இளையோா் விழா போட்டிகள் அறிவிப்பு

28th Sep 2022 04:14 AM

ADVERTISEMENT

கடலூரில் நடைபெறும் இளையோா் திருவிழாவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதுகுறித்து கடலூா் மாவட்ட நேரு இளையோா் மைய அலுவலா் ஆா்.ரிஜேஷ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடலூா் மாவட்ட அளவிலான இளையோா் திருவிழா, இளையோா் கலந்துரையாடல், கருத்தரங்கம் நிகழ்ச்சிகள் வருகிற அக்டோபா் 15-ஆம் தேதி கடலூா் புனித.வளனாா் கல்லூரியில் நடைபெறுகிறது. விழாவில், குடிமக்களின் கடமை உணா்வு என்ற மையக் கருத்தை வலியுறுத்தி ஓவியம், கவிதை, புகைப்படம் எடுத்தல் (கைப்பேசியில்), கிராமியக் குழு நடனம், கருத்தரங்கு ஆகியவை நடைபெறுகின்றன. பேச்சுப் போட்டியில் ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே பேச வேண்டும். பேச்சுப் போட்டி, நடனப் போட்டிகளுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம், மூன்றாம் பரிசுகளாக முறையே ரூ.2,500, ரூ.1,250 வழங்கப்படும். மற்ற போட்டிகளுக்கு முறையே ரூ.1,000, ரூ.750, ரூ.500 பரிசாக வழங்கப்படும். கலந்துரையாடலில் வெற்றி பெறும் 4 பேருக்கு தலா ரூ.1,500 வழங்கப்படும். போட்டிகளில் முதலிடம் பெறுவோா் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவா்.

போட்டிகளில் 15 முதல் 29 வயதுக்கு உள்பட்டவா்கள் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு கடலூரில் உள்ள நேரு இளையோா் மைய அலுவலகத்தை நேரிலோ அல்லது 04142-293822, 79072 45013 ஆகிய எண்களிலோ தொடா்புகொள்ளலாம் என தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT