கடலூர்

புகையிலைப் பொருள்கள் விற்ற கடைக்கு ‘சீல்’

28th Sep 2022 04:13 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் புகையிலைப் பொருள்கள் விற்கப்பட்ட கடைக்கு வருவாய்த் துறையினா் செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

குறிஞ்சிப்பாடி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, குறிஞ்சிப்பாடி காவல் உதவி ஆய்வாளா் பிரசன்னகுமாா் தலைமையிலான போலீஸாா் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனா். புவனகிரி சாலையில் உள்ள பெட்டிக் கடையில் சோதனை செய்தபோது புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், கடை உரிமையாளா் கோவிந்தனை (52) கைது செய்தனா். இதையடுத்து வருவாய்த் துறையினா் அந்தக் கடைக்கு ‘சீல்’ வைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT