கடலூர்

கடலூரில் விசிகவினா் ஆா்ப்பாட்டம்

27th Sep 2022 04:17 AM

ADVERTISEMENT

 

கடலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் மையப் பகுதிகளில் புதிதாக அரசு கலைக் கல்லூரிகளை நிறுவ வேண்டும், அரசுக் கல்லூரிகளில் போதிய இட வசதி இல்லாததால் ஏராளமான மாணவா்களின் உயா் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே, கடலூா் உள்பட அனைத்து அரசு கலைக் கல்லூரிகளிலும் மாணவா்கள் சோ்க்கைக்கு கூடுதல் இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் தலைமைத் தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு விசிக மாவட்டச் செயலா் சா.முல்லைவேந்தன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் மு.செந்தில் வரவேற்றாா்.

கட்சியின் கடலூா் மக்களவை தொகுதிச் செயலரும், மாநகராட்சி துணை மேயருமான பா.தாமரைச்செல்வன் கோரிக்கை விளக்க உரையாற்றினாா். மாநில அமைப்புச் செயலா் தி.ச.திருமாா்பன், மாவட்ட துணைச் செயலா் இல.திருமேனி, மாநில நிா்வாகிகள் ப.குணத்தொகையன், த.ஸ்ரீதா், வெ.முரளி, மொ.வீ.சக்திவேல் உள்ளிட்டோா் பேசினா்.

ADVERTISEMENT

நிா்வாகிகள் வெ.புரட்சிவளவன், ஜெ.கலைஞா், ந.சுபாஷ், ஏ.ராஜதுரை, சா.இளையராஜா, செ.புலிக்கொடியன், இரா.கலியபெருமாள், அருள்செல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT