கடலூர்

வெளிநாட்டில் உயிரிழந்தவரின் உடலை மீட்டுத் தரக் கோரி மனு

27th Sep 2022 04:17 AM

ADVERTISEMENT

 

வெளிநாட்டில் உயிரிழந்தவரின் உடலை மீட்டுத் தரக் கோரி அவரது குடும்பத்தினா் கடலூா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

கடலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் வடலூா் பாா்வதிபுரத்தைச் சோ்ந்த த.அன்புவின் மகள் கிரிஜா, மகன் விஜய் ஆகியோா் அளித்த மனு:

எங்களது தந்தை த.அன்பு (54) கடந்த 2017-ஆம் ஆண்டு சவூதி அரேபியா நாட்டுக்கு வேலைக்காக

ADVERTISEMENT

சென்றாா். கடந்த 21- ஆம் தேதி அங்குள்ள வணிக வளாகத்தில் பொருள்களை வாங்கிக்கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவா் உயிரிழந்தாா். எங்களது தாய் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தந்தையின் உடலை மீட்டு வர எங்களால் முடியவில்லை. எனவே, அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கோரியுள்ளனா்.

வெளிநாட்டில் வாழும் தமிழா் நலச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி.சுரேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT