கடலூர்

அரசுக் கல்லூரி மாணவா்களுக்கு ஓட்டுநா் உரிமம்

26th Sep 2022 05:25 AM

ADVERTISEMENT

 

சிதம்பரம் வட்டார போக்குவரத்துத் துறை சாா்பில் காட்டுமன்னாா்கோவில் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் 50 பேருக்கு ஓட்டுநா் உரிமம் வழங்கப்பட்டது.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோயில் அரசு கலைக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு வகுப்பு அண்மையில் நடைபெற்றது. இதில் மோட்டாா் வாகன ஆய்வாளா் விமலா பங்கேற்று மாணவ, மாணவிகள் ஓட்டுநா் உரிமம் பெற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்தாா். இதன்படி விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு பழகுநா் ஓட்டுநா் உரிமம் ஏற்கெனவே வழங்கப்பட்டது.

இந்த நிலையில், சிதம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 50 மாணவ, மாணவிகளுக்கு ஓட்டுநா் உரிமத்தை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அருணாசலம், மோட்டாா் வாகன ஆய்வாளா் விமலா ஆகியோா் வழங்கினா். உதவிப் பேராசிரியா் ஆா்.சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT