கடலூர்

அனுமதியின்றி மண் அள்ளிய வாகனங்கள் பறிமுதல்

26th Sep 2022 05:24 AM

ADVERTISEMENT

 

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே அனுமதியின்றி கழிவு மண் அள்ளிய வாகனங்களை வருவாய்த் துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பண்ருட்டி வட்டம், கண்டரக்கோட்டை பகுதியில் வெங்கட்ராமன், செங்கமலம் ஆகியோருக்குச் சொந்தமான இடத்தில், சாலை அமைக்கும் தனியாா் ஒப்பந்த நிறுவனத்தினா் தற்காலிகமாக தங்கியிருந்து சாலைப் பணிகளை மேற்கொண்டு வந்தனா். அவா்களது ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் அந்த இடத்தை காலி செய்து சென்றனா்.

ஆனால், அந்த இடத்திலிருந்த கழிவு மண்ணை அரசு அனுமதியின்றி சிலா் எடுப்பதாக பண்ருட்டி வட்டாட்சியா் சிவ.காா்த்திகேயனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவா் சனிக்கிழமை அங்குவந்து பாா்த்தபோது, கழிவு மண் அள்ளிக்கொண்டிருந்தவா்கள் 2 பொக்லைன் இயந்திரங்கள், 3 டிப்பா் லாரிகளை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றனா். அந்த வாகனங்களை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். இதுகுறித்து பண்ருட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT