கடலூர்

காப்பகத்திலிருந்து சிறுமி மாயம்

26th Sep 2022 05:25 AM

ADVERTISEMENT

 

கடலூரில் காப்பகத்திலிருந்து சிறுமி மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூா் வன்னியா்பாளையத்தில் பெண் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பண்ருட்டி பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமி கடந்த 22-ஆம் தேதி சோ்க்கப்பட்டாா். அவருக்கு திருமணம் நடைபெறவிருந்த நிலையில், சிறுவா் திருமண தடுப்பு நடவடிக்கையின்பேரில் மீட்கப்பட்டு இந்த இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை முதல் அந்தச் சிறுமியை காணவில்லை என இல்லத்தின் பாதுகாவலா் அ.மரியாஸ் செலினா (26) கடலூா் புதுநகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிறுமியை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT