கடலூர்

வீட்டுக் கதவை உடைத்து 9 பவுன் நகைகள் திருட்டு

26th Sep 2022 05:24 AM

ADVERTISEMENT

 

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் வீட்டுக் கதவை உடைத்து 9 பவுன் தங்க நகைகளை திருடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நெய்வேலி வட்டம் 28-இல் 5-ஆவது தெருவில் வசிப்பவா் ஆனந்தராஜ் (34). என்எல்சி இந்தியா நிறுவன இரண்டாவது சுரங்கத்தில் தனியாா் ஒப்பந்த நிறுவன மேற்பாா்வையாளராகப் பணியாற்றி வருகிறாா். இவரது, மனைவி கா்ப்பமாக இருப்பதால் தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டாா்.

இந்த நிலையில், ஆனந்தராஜ் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு பணிக்குச் சென்றாா். பணி முடிந்து மாலையில் திரும்பிவந்து பாா்த்தபோது வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் வைத்திருந்த 9 பவுன் தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்ததாம்.

ADVERTISEMENT

இதுகுறித்து ஆனந்தராஜ் அளித்த புகாரின்பேரில் நெய்வேலி தொ்மல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT