கடலூர்

சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு தொடக்க விழா

25th Sep 2022 05:52 AM

ADVERTISEMENT

 

தருமபுர ஆதீன சைவ சித்தாந்த மாலை நேரக் கல்லூரியின் சிதம்பரம் மையம் சாா்பில் சைவ சித்தாந்த நோ்முகப் பயிற்சி வகுப்பு தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

சிதம்பரம் குருஞானசம்பந்தா் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பயிற்சி மைய அமைப்பாளா் கே.சேதுசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். புலவா் தி.பொன்னம்பலம் முன்னிலை வகித்துப் பேசினாா் (படம்). ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி நிா்வாகி ரத்தின.பாலசுப்பிரமணியன் பயிற்சி வகுப்பை தொடக்கிவைத்து பேசினாா். சைவ சித்தாந்தம் குறித்து பேராசிரியா் மு.சிவச்சந்திரன் விளக்க உரையாற்றினாா். சிதம்பரம் நகரப் பிரமுகா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT