கடலூர்

பெண்ணின் படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தவா் கைது

25th Sep 2022 05:53 AM

ADVERTISEMENT

 

பெண்ணின் படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மேல்பாதி கிராமத்தைச் சோ்ந்த கனகராஜ் மகன் முத்தமிழன் (25). இவா், 22 வயது பெண்ணை காதலித்து வந்தாராம். ஆனால், முத்தமிழனின் நடத்தை சரியில்லாததால் அவருடன் பழகுவதை அந்தப் பெண் நிறுத்திவிட்டாராம்.

இதனால் ஆத்திரமடைந்த முத்தமிழன், அந்தப் பெண்ணுடன் தனியாக இருந்தபோது எடுத்த படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் பண்ருட்டி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முத்தமிழனை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT