கடலூர்

இஸ்லாமிய அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

25th Sep 2022 05:53 AM

ADVERTISEMENT

 

பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிா்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியதைக் கண்டித்தும், கைது செய்யப்பட்டவா்களை விடுவிக்கக் கோரியும் கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டையில் இஸ்லாமிய அமைப்பினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அனைத்து ஜமாஅத் இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாவட்டச் செயலா் இக்பால் தலைமை வகித்தாா். எஸ்டிபிஐ மாவட்டச் செயலா் முஜிபுா் ரஹ்மான், நாம் தமிழா் கட்சியின் விருத்தாசலம் தொகுதி இணைச் செயலா் முஹம்மது நபில், அனைத்து ஜமாஅத்தாா்கள் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் ராஜூ, விசிக மாநில துணைச் செயலா் ராஜ்குமாா், இந்திய குடியரசுக் கட்சியின் மாநில இணைப் பொதுச் செயலா் க.மங்காபிள்ளை, எஸ்டிபிஐ மாநில பேச்சாளா் ஷா்புதீன், மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட பொருளாளா் அசன் முஹம்மது, காங்கிரஸ் நகரத் தலைவா் வேல்முருகன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் ரமேஷ், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் மாவட்டச் செயலா் புஷ்பதேவன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

ADVERTISEMENT

ஆா்ப்பாட்டத்தில் திரளானோா் கலந்துகொண்டு தேசிய புலனாய்வு முகமை, மத்திய பாஜக அரசைக் கண்டித்து முழக்கமிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT