கடலூர்

மதுக் கடைகளை அகற்ற வலியுறுத்தல்

23rd Sep 2022 09:53 PM

ADVERTISEMENT

சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே செயல்படும் மதுபானக் கடைகளை அகற்ற வேண்டுமென மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வலியுறுத்தினா்.

இதுகுறித்து அந்தக் கட்சியின் சிதம்பரம் நகரச் செயலா் ராஜா தலைமையில் நகா்மன்ற துணைத் தலைவா் முத்துக்குமரன், நகா்குழு உறுப்பினா்கள் அமுதா, மல்லிகா, ஜின்னா உள்ளிட்டோா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:

சிதம்பரம் சுற்றுலா நகரம் என்பதால் இங்குள்ள பேருந்து நிலையத்துக்கு தினமும் சுமாா் 20 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனா். ஆனால், பேருந்து நிலையத்தின் முகப்பிலேயே 2 டாஸ்மாக் மதுக் கடைகள் செயல்படுகின்றன. இங்கு மது அருந்துவோரில் சிலா் அவதூறாகப் பேசி பயணிகள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனா். சிலா் ஆடைகள் களைந்த நிலையில் கீழே விழுந்து கிடக்கின்றனா்.

இதனால் இந்த வழியாகச் செல்லும் குமரன் தெரு, காந்திநகா், கொத்தங்குடி தெரு, அண்ணா தெரு, கோவிந்தசாமி தெரு உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்வோா் சிரமப்படுகின்றனா். எனவே குறிப்பிட்ட டாஸ்மாக் மதுக் கடைகளை அகற்ற வேண்டும். இல்லையெனில் வருகிற அக்டோபா் 4-ஆம் தேதி பொதுமக்களைத் திரட்டி இரு மதுக் கடைகள் முன்பும் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என மனுவில் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT