கடலூர்

மாதா் சங்கம் சாா்பில் போட்டிகள் அறிவிப்பு

23rd Sep 2022 09:52 PM

ADVERTISEMENT

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாநில மாநாடு வரும் 29, 30, அக்டோபா் 1-ஆம் தேதிகளில் கடலூரில் நடைபெற உள்ள நிலையில், இதையொட்டி மாணவா்கள், பொதுமக்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதன்படி, சனிக்கிழமை (செப். 24) காலை 10 மணிக்கு தேவனாம்பட்டினம் பெரியாா் அரசு கலைக் கல்லூரியில் மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி, கட்டுரை, ஓவியம், கவிதைப் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தப் போட்டிகளில் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் பள்ளி மாணவா்கள் மற்றும் கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம்.

மேலும், ஞாயிற்றுக்கிழமை (செப். 25) காலை 6 மணிக்கு கடலூா் நகர அரங்கிலிருந்து மினி மராத்தான் போட்டியும், காலை 10 மணிக்கு அரசுக் கல்லூரியில் சதுரங்கப் போட்டியும் நடைபெற உள்ளன. இந்தப் போட்டிகளில் பங்கேற்க விரும்புவோா் 79041 49191, 94432 22310, 99414 25119 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று மாநாட்டு வரவேற்பு குழுச் செயலா் பி.தேன்மொழி தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT